ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்த அரசின் பங்குகளை 100% விற்க ஒப்புதல்

பல மாநிலங்களில் ஜெட் எரிபொருள் மீதான சுங்கவரி, கருவிகள் மற்றும் கருவித் தொகுதிகளில் சுங்கவரி விலக்கு, பல்வேறு உதிரி பாகங்கள் மற்றும் நுகர்பொருட்களில் ஜிஎஸ்டியை குறைத்தது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்த அரசின் பங்குகளை 100% விற்க ஒப்புதல்
New Delhi:

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏர் இந்தியாவின் அரசாங்கம் தன் வசமுள்ள பங்குகளை 100 சதவீதம் விற்பனை செய்ய  ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறினார். 

 “ புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், ஏர் இந்தியா நிறுவனம் குறித்த குறிப்பிடப்பட்ட மாற்று வழிமுறை புனரமைக்கப்பட்டு ஏர் இந்தியாவின் முதலீட்டை மீண்டும் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அரசாங்கத்தில் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் ஹரிதீப் சிங் பூரி மக்களவையில் தெரிவித்தார். 

விமானத்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஆறு விமான நிலையங்களை பொது தனியார் கூட்டாண்மை கீழ் குத்தகைக்கு விட கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

அகமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களை குத்தகை எடுத்ததற்கான விருது இந்திய விமான நிலையத்தின் ஆணையத்தின் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. 

Newsbeep

பல மாநிலங்களில் ஜெட் எரிபொருள் மீதான சுங்கவரி, கருவிகள் மற்றும் கருவித் தொகுதிகளில் சுங்கவரி விலக்கு, பல்வேறு உதிரி பாகங்கள் மற்றும் நுகர்பொருட்களில் ஜிஎஸ்டியை குறைத்தது. 

ஜெட் ஏர்வேஸின் விமானங்களை மற்ற விமானங்களுக்கு விரைவாக மாற்றுவதற்கு அரசாங்கம் உதவியுள்ளது. புதிய விமான நிறுவனங்களுக்கு சர்வதேச வழித்தடங்களில் பறக்க புதிய விமானங்களுக்கு ஐந்தாண்டு தடை நீக்கப்பட்டுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)