Profit

2 நாட்களில் 1 ரூபாய் உயர்வு - உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

நேற்று கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரே நாளில் 50 பைசா விலை உயர்த்தப்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
2 நாட்களில் 1 ரூபாய் உயர்வு - உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 38 முதல்ல் 49 பைசா வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரே நாளில் 50 பைசா விலை உயர்த்தப்பட்டது.

சென்னையில் பெட்ரோல் விலை 83 ரூபாய்க்கு மேல் சென்றது. பெட்ரோல் விலை டெல்லியில் 80.38 ரூபாயும், மும்பையில் 87.77 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 83.27 ரூபாயும், சென்னையில் 83.56 ரூபாயாகவும் உள்ளது.

sislekss

டீசல் விலை டெல்லியில் 72.51 ரூபாயாகவும், மும்பையில் 76.98 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 75.36 ரூபாயகவும், சென்னையில் 76.66 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

இன்று கச்சா எண்ணெய் விலை 34 சென்ட்கள் குறைந்து 76.16 டாலர்களாக இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 26 பைசாக்கள் அதிகரித்து 71.73 ரூபாயாக இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததே காரணம் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார். “பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டியின் கொண்டு வரப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகளை சந்திப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஜி.எஸ்.டியின் கீழ் வந்தால், அனைத்து மக்களும் பலன்களைப் பெறுவர்” என்றார்.

கடந்த ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்தது மத்திய அரசு. பெட்ரோல் மிதான கலால் வரி 19.48 ரூபாயாகவும், டீசலுக்கான கலால் வரி 15.33 ரூபாயாகவும், மத்திய அரசு வசூலித்து வருகிறது. விலை உயர்வை கருத்தில் கொண்டு கலால் வரி குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய அரசு முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top